tamilnadu

img

ஜெய் ஸ்ரீ ராம் மேற்கு வங்க கலாச்சாரமல்ல - அமர்தியா சென்

மக்களை அடிப்பபதற்கே ஜெய் ஸ்ரீ ராம் வாசகம் - அமர்தியா சென்
ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகம் வங்காளத்தில் மக்களை அடிப்பதற்கே பயன்படுகிறது என்ற பொருளாதார அறிஞர் அமர்தியாசென் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செல்லும் இடங்களில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடுகின்றனர். மேலும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற  வார்த்தை பொறிக்கப்பட்ட கடிதத்தையும் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்தியாசென் ஜெய்ஸ்ரீராம் என்பது வங்காள கலாச்சாரமல்ல. வங்காள கலாச்சாரத்திற்கு மா துர்கா என்ற வாசகத்திற்குமே  அதிக தொடர்பு உண்டு என் 4 வயது பேத்தியிடம் அவருக்கு பிடித்த கடவுள் யார் என்று கேட்டால் மா துர்கா என்கிறார். எனவே மா துர்கா என்பது மேற்கு வங்க மக்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது எழுந்து வரும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகம் மக்களை அடிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வாசகத்தை இதற்கு முன்பு இவ்வளவு பெரிதாக நான் கேட்டதில்லை. அதேபோல் தற்போதுதான்  மேற்கு வங்கத்தில் ராம் நவமி கொண்டாட்டங்கள் தீவிரமடைகிறது. எனினும் இவை எதுவும் துர்கா கடவுளின் முக்கியத்துவத்திற்கு அருகில் வர முடியாது என தெரிவித்துள்ளார்.

;